சிதிலமடைந்த சிவன் கோயில் திருப்பணி

சிதிலமடைந்த சிவன் கோயில் திருப்பணி

சென்னை பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் புதுவள்ளூர் ஊராட்சியில் உள்ள நயப்பாக்கம் கிராமத்தில் பிள்ளையார், முருகன், சிவலிங்கம், அம்மன், சண்டிகெஸ்வரர் மற்றும் கால பைரவர் விக்ரஹங்களுடன் சிதிலமடைந்திருந்த ஈஸ்வரன் கோயில் முற்றிலும் இடிக்கப் பட்டு புதிதாக கோயில் கட்டிக்கொள்ள இறைவன் திருவுள்ளம் கொண்டுள்ளார்.

இந்த கோவிலில் அண்ணாமலையார் அறப்பணிக்குழு 27.07.14 செய்த உழவாரப்பணியைத் தொடர்ந்து புதிதாக நிர்மாணம் செய்வதற்கு காஞ்சி  மஹாபெரியவாளின் உத்தரவு தாம்பரத்தில் வசிக்கும் அவரது பக்தையின் மூலமாக நவம்பர் 2014 ல் வந்தது.

பெரியவா வாக்கு

இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. வசிஷ்டர் வாமதேவர் முதலான சப்தரிஷிகள் பூஜை செய்தது. இத்தலத்தில் ஸ்வாமி அம்பாளுக்கு தனது மூன்றாவது கண்ணைக் கொடுத்திருக்கிறார். அப்பழுக்கில்லாத ஸ்வாமிக்கு மாசிலமணிஸ்வரர் என்று பெயர்.  ஸ்வாமி புத்தி கூர்மைக்கு அனுக்ரஹம் செய்கிறார்.

தீர்கமான கண் பார்வைக்கு அம்பாள் அனுக்ரஹம் செய்வதால் அம்பாளுக்கு நேத்ரதாயினீ என்று பெயர் வைத்திருக்கிறேன். மங்கையர்க்கரசி என்றும் ஒரு பெயர் வைத்திருக்கிறேன். அம்பாள் மலட்டுத் தன்மையையும் நீக்குபவள்.

காஞ்சி மடத்தில் 15 வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கங்காதரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜீவன் இன்றும் நயப்பாக்கத்தில் தபஸ் செய்துகொண்டு உள்ளது.

ஒரு பல்லவ ராஜா இங்கு உள்ள சுவாமியையும் அம்பாளையும் பிரார்த்திக்க, புத்தி சுவாதீனம் இல்லாமலும் கண் பார்வைக் குறைபாடும் உள்ள அவரது மகள் பூரண குனம் அடைந்தாள்.

இந்த கோயிலுக்கு எதிரில் தாமரைக் குளம் இருக்கிறது. அதற்கு பினாகபாணி தீர்த்தம் என்று பெயர். குஷ்ட்டம் முதற்கொண்டு அனைத்து வியாதிகளையும் போக்கும் புனிதத் தீர்த்தம்.

தேவப்ரஷ்ணம் தெரிவித்தது: இந்த ஸ்தலத்தில் குருவின் சக்தி அபரிமிதம். யக்ஷர்களும் யக்ஷத்ரீகளும் இங்கு திருமணம் நிச்சயித்துக் கொள்கிறார்கள். ஆகவே இது திருமணத் தடை நீக்கும் ஸ்தலம். அம்பாள் மலட்டுத் தன்மையை நீக்குபவள்.

மேற்கூரையொடு மேடை ஒன்று அமைத்து அதில் அனைத்து விக்ரஹங்களையும் 12.06.2015 அன்று பிரதிஷ்டை செய்து நித்ய பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

இந்த திருப்பணியில் ப்ங்கு பெற/ உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்புக்கு:

திரு. வி.ராமச்சந்திரன் (+91 9884080543, 9884888730 அண்ணாமலையார் அறப்பணிக்குழு (Regsitered Trust)

E19 Golden Jubilee Apartments,

Anna Main Road

K.K.Nagar

Chennai 600078

https://www.facebook.com/groups/nayapakkammasilamaneeswarar/

2 Responses to “சிதிலமடைந்த சிவன் கோயில் திருப்பணி”

  1. Sekar January 29, 2018 at 2:14 pm #

    இத் திருக்கோவில் பாடல்கள் அனுப்பவும்

  2. Sekar January 29, 2018 at 2:14 pm #

    இத் திருக்கோவில் பாடல்கள் அனுப்பவும்

Leave a Reply

UA-85045786-1